Tuesday, May 29, 2018

 வணக்கம் நண்பர்களே சென்னை  to  கோவா  சுற்றுலா விபரம்

தமிழ்நாட்டிலிருந்து  கோவா  சுற்றுலா  நமது  பட்ஜெட்க்கு  ஏற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் 
1.ரயில் பயணம் 2. பேருந்து பயணம் 3. விமான பயணம் 

ரயில் பயணம் சென்னை - கோவா  - சென்னை  பயணம்  செய்ய 3 நாட்கள் ஆகும்.

சென்னைலிருந்து பேருந்து மூலம் பயணம் செய்தலும் இதே நாட்கள் ஆகும் பேருந்தில் பயணம் செய்தல் உடல் வலியும் அசதியும் அதிகம் இருக்கும் .

விமான பயணம் : சென்னை யில்  இருந்து கோவா செல்ல 1.15 மணி நேரமே ஆகும் தினமும் காலை 4.50 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம் கோவா ஏர்போர்ட்டில் 6.20க்கு அரைவல் ஆகும். 

 நாங்கள்  3 மாதத்திற்கு முன்பே 20நபர்களுக்கும் விமான டிக்கெட் எடுத்து வைத்து விட்டோம் (முன்கூட்டியே புக் செய்தால் கட்டணம் குறைவாக இருக்கும்) அதிகாலை 4.50க்கு  கிளம்பும் விமானத்திற்கு 2மணி நேரம் முன்பாக விமான  நிலையத்தில் இருக்கவேண்டும். நங்கள் 3மணிநேரம் முன்பே சென்றுவிட்டோம். சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையம் முதல் தளத்தில் 4வது  நுழைவாயிலில் entry யாக  வேண்டும். முதலில் நம் கொண்டு செல்லும் லக்கேஜ் எடை சரி பார்த்து கொள்ள வேண்டும்  (டிக்கெட் புக் செய்யும் போது 15 கிலோ லக்கேஜ் இருக்குமாறு செய்து கொள்ளவும்) hand  லக்கேஜயில்  உணவு பொருட்கள் மற்றும் பல பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை எனவே HAND   லக்கேஜ் இல்லாமல் தனியாக 15 கிலோ லக்கேஜ் புக் செய்து  கொள்வது நல்லது .லக்கேஜ் எடை சரிபார்த்த பின் லக்கேஜ் ஸ்கேன் செய்து அதில் அவர்கள் சீல் செய்து விடுவார்கள்  பின்பு  இண்டிக்கோ  நிறுவனத்தில் போர்டிங்  பாஸ்  தருவார்கள் 

 அதில் நமது எந்த எண் GATE  வழியாக   காத்திருக்கவேண்டும் என்ற எண் மற்றும்  விமான இருக்கை   எண்  இருக்கும் (உதாரணமாக GATE :14 , SEAT : 1பி ) லக்கேஜ்யை ஸ்டிக்கர் ஒட்டி விமான லக்கேஜ் பிரிவிற்க்கு அனுப்பி விடுவார்கள். நம் பின்பு பயணிகளை பரிசோதனை செய்வார்கள் அப்போது நம் கையில் எடுத்து செல்லும் HAND BAGS, மொபைல் போன், லேப்டாப் போன்ற வைகளை தனியாக ஸ்கேன் செய்து பின்பு நாம் எடுத்து கொள்ளலாம். நாங்கள் அனைத்து வேலைகளையும் சரியாக முடித்து  GATE:14ல் சிறிது நேரம் காத்திருந்தோம் 04.00 மணி க்கு GATE:14 OPEN செய்தார்கள் இண்டிகோ நிறுவனத்தின் பஸ்சில் ஏறி அமர்ந்தோம் 20 நிமிட பயணம் கோவா செல்லும் விமானம் இருக்கும் இடத்தில் பஸ் நின்றது பஸ்சில் இருந்து இறங்கி விமானத்தில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்தோம் சரியாக 04.50க்கு  விமானம் கிளம்பியது எங்களுடன்  வந்தவர்களில் சிலர் முதன் முதலாக விமானம் பயணம் செய்க்கிறார்கள் அவர்கள் முகத்தில் சந்தோசம் கலந்த பயம் சரியாக 06.10 க்கு கோவா ஏர்போர்ட் வந்தோம் பின்பு எங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் உள்ளே உள்ள washroom யில் REFRESH  ஆகிக்கொண்டு வெளியில் வந்தோம் 2 டெம்போ TRAVELER வேன் எங்களுக்காக சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்தார்கள் வேன் பாக பீச் நோக்கி சென்றது. நார்த் கோவா பகுதியில் பாகா  பீச் அமைந்துள்ளது கோவாவில் தங்கவேண்டும் என்றால் பீச் ரிசார்ட் , ஹோட்டல் , காட்டேஜ் தேர்ந்தெடுப்பது நல்லது பீச் அருகில் நாம் ரூம் புக் செய்து இருந்தால் காலையில் வாக்கிங் செல்வதெற்க்கும் இரவில் பீச் ஹோட்டல் களில் நடக்கும் DJ டான்ஸ் கண்டு ரசிப்பதிற்கும் பின் தாமதமாக ரூம் செல்ல நேர்வதால் பீச் அருகே தங்குவது சிறந்தது எங்கள் முதல் நாள் சைட் சீயிங் aguda fort யில் தொடங்கி chopra fort வரை உள்ள கண்டோலிம் பீச், கல்லங்த் பீச், பாகா பீச், அஞ்சுனா பீச், வகாடோர் பீச் இவை அனைத்தும் அருகருகே இருப்பதால் ஒரே நாளில் பார்த்துவிடலாம்


Friday, May 18, 2018

2018 மே மாதம் கோவா சுற்றுலா வருகை தந்த வாடிக்கையாளர்கள்  அனைவருக்கும் நன்றி







Monday, March 26, 2018








கோடை  விடுமுறை  கோவா  சுற்றுலா 3 இரவு / 4பகல் பதிவு  நடைபெறுகின்றது  தொடர்புக்கு  94861 50416